மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த முதுகலை மாணவி.. திருமண சம்பிரதாயங்களுக்காக கல்லூரியில் காத்திருந்த கணவர்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2023, 1:52 pm

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலின் மகள் யுவஸ்ரீ , 23 வயதான இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி அறிவியல் படித்து வருகிறார்.

இதேபோல் வளவனுர் அருகேயுள்ள குமரக்குப்பம் பகுதியை சேர்ந்த சிவகுமாரின் மகன் சக்திவேல் , இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் .

இந்நிலையில் விழுப்புரம் அடுத்த வளவனூரில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை திருமண மண்டபத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மாணவிக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது.

மேலும் இன்று திருமணம் நடைபெற்ற மாணவி யுவஸ்ரீக்கு கல்லூரியில் தமிழ் செமஸ்டர் தேர்வு இன்று நடை பெறவுள்ளது.

இதனை யுவஸ்ரீ எழுத முடிவு செய்தார். அதன்படி, திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே அவர், மணக்கோலத்தில் அவரது கணவருடன் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்தார்.

அவரை, கல்லூரி பேராசிரியர்கள் வெகுவாகப் பாராட்டினர். தேர்வு எழுதி முடித்த பின்னரே , திருமண சம்பிரதாயங்கள் நடைபெறவுள்ளதால் , மணக்கோலத்தில் யுவஸ்ரீயின் கணவர் கல்லூரி வளாகத்தின் அருகே காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது .

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!