ஒட்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிச்சாம் : பாஜகவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்.. எல்லா அவருக்காகத்தான்!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2024, 5:59 pm

ஒட்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிச்சாம் மண்ணின் மைந்தனுக்கான குரல் கொடுத்த முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திருச்சி சூர்யாவை வேடந்தாங்கல் பறவைகளுக்கு ஆதரவாக கட்சியிலிருந்து நீக்கிய பாஜகவை கண்டித்து புதுக்கோட்டை நகர் முழுவதும் எச்சரிக்கை நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன புதுக்கோட்டை நேதாஜி மக்கள் நல சங்கம் சார்பில் புதுவை ராஜகுருதேவன் என்பவரது பெயரில் இந்த எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன.

பாஜகவில் நடைபெறும் உட்கட்சி பூசலால் தினம் தினம் ஒருவர் பாஜகவில் இருந்து நீக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த எச்சரிக்கை போஸ்டரால் புதுக்கோட்டை பாஜகா வினரிடையே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூடடணியினர் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தனர். ஏராளமான தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர்.

இந்நிலையில் பாஜகவில் கோஷ்டி பூசல் தலை தூக்கி உள்ளது.
அண்ணாமலையை எதிர்த்தால் கட்சியில் இருக்க முடியாது என்ற ஒரு மாயை தற்போது துவங்கியுள்ளது.

ஏற்கனவே முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மேடையில் வைத்து அமிர்தா கண்டித்த வீடியோ பல்வேறு சமூக தளங்களில் ஒளிபரப்பி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கட்சிக்காக உழைத்த திருச்சி சிவா போல் ஏராளமான கட்சிக்காக உண்மையாக உழைக்கும் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் நீக்கப்படுவது பாஜகாவினரிடையே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 376

    1

    0