எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே என விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டு அரசியலுக்கும், சினிமா துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர் ஆவார்கள்.
மேலும் நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டவர்கள் கட்சி நடத்தி வருகின்றனர். தென்னிந்தியாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜயக்கு தமிழக மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
விஜயின் பிறந்தநாள் படம் ரிலீஸ் ஆகும் போது அரசியல் சார்ந்த போஸ்டர்களை ஒட்டி விஜயை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் தான் விஜய்யும் சென்னை பனையூரில் உள்ள தனது மன்ற தலைமை அலுவலகத்தில் ரசிகர் சந்திப்பையும் நடத்தினார்.
அதுவே விஜய் அரசியலுக்கு வருவார் என பல விவாதங்களை எழுப்பி வரும் நிலையில், மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே
மேலும் அந்த போஸ்டரில் காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது மகன் ராகுல் காந்தி, திமுக கட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்றைய முதல்வர் ஸ்டாலின், மதிமுக கட்சி தலைவர் வைகோ அவரது மகன் துறை வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோரின் வாரிசு அரசியலின் புகைப்படங்கள் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
நேற்று உதயநிதி அமைச்சராக பதவியேற்றது ஏற்கனவே வாரிசு அரசியல் விவாதங்களை எழுப்பி உள்ள நிலையில் விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
This website uses cookies.