அப்பாடா.. இப்பதா நிம்மதியா இருக்கு : தக்காளி விலை குறைந்தது…. இல்லத்தரசிகள் பெருமூச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2023, 9:23 am

கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது.

தொடர்ந்து தக்காளி வரத்து கோயம்பேடு சந்தைக்கு குறைந்து கொண்டே வந்ததால் இந்த விலை ஏற்றம் என கூறப்பட்டு வந்தது,.

இந்நிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகமானதால் தக்காளி விலை 40 ரூபாய் குறைந்து கிலோ 130க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 80, 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே தக்காளி கிலோ ரூ.90க்கு விற்கப்படும் நிலையில், கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூட்டம் கூட்டமாக வந்து போட்டிப்போட்டுக்கொண்டு பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!