கோவிலுக்கு வந்த மூதாட்டியை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்த அர்ச்சகர் : வெளியே தள்ளிய வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2022, 6:08 pm

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக உள்ளவர் மாரிசாமி.

தமிழ்நாட்டில் மாற்று இனத்தில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் அர்ச்சகர் என்ற ஆணவத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை கனிவு, இரக்கம் இல்லாமல் அரக்கர் போல செயல்பட்டு வரும் இந்த அர்ச்சகர் மாரிசாமி.

கோவிலுக்கு வந்த வயதான மூதாட்டி ஒருவர் அங்குள்ள பூக்களை, பக்தரை தகாத வார்த்தைகளால் பேசி அவரை அடித்து உதைத்து கோவிலை விட்டு வெளியே தரதர வென்று இழுத்து சென்று தாக்குதல் நடத்திய அர்ச்சகிரின் வீடியோ வைரலாகி வருகிறது.

கொலை வெறி தாக்குதல் நடத்தி கோவிலின் புனித தன்மையை சீர்குலைத்து திருக்கோவில் நிர்வாகத்திற்கும் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறைக்கும்,தமிழக அரசுக்கும் அவபெயர் ஏற்படுத்தும் (அர்ச்சகர் மாரிசாமி) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே சமயம், கோவிலின் புனித தன்மையை காப்பாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ