பயணிகளை அலற விட்ட தனியார் பேருந்து… உயிரை கையில் பிடித்து ஓட்டம் : அதிர்ச்சி வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2023, 5:05 pm

கோவையில் ஒரு சுந்தரா ட்ராவல்ஸ்? தனியார் பேருந்தால் அலறிய ஓடிய பயணிகள் : அதிர்ச்சி வீடியோ!!!

கோவையில் இருந்து அன்னூர் வழியாக சத்தியமங்கலத்துக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று அஜந்தா என்ற தனியார் பேருந்து வழக்கம் போல பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

பேருந்து அன்னூர் அருகே பசூர் பகுதிக்கு பேருந்து வந்தபோது, எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறி பேருந்து முழுவதும் பரவியது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்திய நிலையில் பயணிகள் அலறியடித்தவாறு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

பேருந்தில் இருந்து வெளியேறிய புகை சாலை முழுவதும் பரவி புகைமண்டலமாக காட்சியளித்து. இதனால் அந்த சாலை வழியாக வந்த பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தபட்டது. இதையடுத்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்‌,

திடீரென எஞ்சின் பகுதியில் இருந்து ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலன்ட் ஆயில் குறைந்தால் எஞ்சின் வெப்பமடைந்து புகை வெளியேற வாய்ப்புள்ளதாக கூறும் பேருந்து பழுது நீக்கும் வல்லுநர்கள், ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்கும் முன்பு ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலன்ட் ஆயில் உள்ளதா என்பதை கட்டாயம் சோதிக்க வேண்டும் என்கின்றனர்

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!