கோவையில் ஒரு சுந்தரா ட்ராவல்ஸ்? தனியார் பேருந்தால் அலறிய ஓடிய பயணிகள் : அதிர்ச்சி வீடியோ!!!
கோவையில் இருந்து அன்னூர் வழியாக சத்தியமங்கலத்துக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று அஜந்தா என்ற தனியார் பேருந்து வழக்கம் போல பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்து அன்னூர் அருகே பசூர் பகுதிக்கு பேருந்து வந்தபோது, எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறி பேருந்து முழுவதும் பரவியது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்திய நிலையில் பயணிகள் அலறியடித்தவாறு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
பேருந்தில் இருந்து வெளியேறிய புகை சாலை முழுவதும் பரவி புகைமண்டலமாக காட்சியளித்து. இதனால் அந்த சாலை வழியாக வந்த பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தபட்டது. இதையடுத்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்,
திடீரென எஞ்சின் பகுதியில் இருந்து ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலன்ட் ஆயில் குறைந்தால் எஞ்சின் வெப்பமடைந்து புகை வெளியேற வாய்ப்புள்ளதாக கூறும் பேருந்து பழுது நீக்கும் வல்லுநர்கள், ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்கும் முன்பு ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலன்ட் ஆயில் உள்ளதா என்பதை கட்டாயம் சோதிக்க வேண்டும் என்கின்றனர்
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.