சுயநலத்துடன் அண்ணாமலை எடுத்த மட்டமான முடிவால் தான் பிரச்சனையே : எஸ்வி சேகர் பகீர் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 11:16 am

சுயநலத்துடன் அண்ணாமலை எடுத்த மட்டமான முடிவால் தான் பிரச்சனையே : எஸ்வி சேகர் பகீர் குற்றச்சாட்டு!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கோயில்களில் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொள்ள வந்த நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், தமிழகத்தில் அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதில் ஈடுபட்டு கொண்டிருப்பதால் தமிழகத்தில் பா.ஜ.க ஜீரோவாக இருப்பதாகவும், இந்த தேர்தலில் அண்ணாமலையால் பா.ஜ.க மோசமான விளைவை சந்திக்கும் எனவும்,
2024 தேர்தலில் தமிழகத்தில் அண்ணாமலை 25 இடங்களை பிடித்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க 30 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்தார்.

விஜய் அரசியலுக்கு வருவார் என அவரை தவிர எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் சொல்லவில்லை. விஜய் தன்னுடைய ரசிகர் மன்றத்தை சரியாக கட்டமைத்து வைத்துள்ளார். அதன் காரணமாக அவர் அரசியலுக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகம். ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னார் ஆனால் அவரால் வர முடியவில்லை. விஜய் அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா? என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.

மேலும், அ.தி.மு.க கூட்டணி முடிவுக்கு அண்ணாமலை தான் காரணம். கட்சியின் நலனை தாண்டி தான் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் அவர் எடுத்த மட்டமான முடிவு. இதனால் தமிழக பா.ஜ.கவிற்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.

ஆளுநர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தற்செயலாக நடந்த ஒன்று. இதனை அரசியல் ஆக்குவதால் எந்த ஆதாயமும் கிடைக்காது. ஆளுநர் எல்லா விவகாரத்திலும் இதேபோல் செய்து கொண்டிருந்தால் ஆளுகின்ற அரசு மீதுதான் மக்களுக்கு சிம்பதி ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 479

    0

    0