கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த பேராசிரியர்.. தட்டிக்கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து ; அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
3 March 2023, 9:48 pm

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிக்கு சில்மிஷம் செய்ய முயன்ற பேராசிரியரை தட்டிக்கேட்ட மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியை அடுத்த புத்தூரில் அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், அந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர், மாணவிக்கு தவறான முறையில் செல்போனில் மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த அதே கல்லூரியில் பயிலும் மாணவர் திலீப் குமார், பேராசிரியரிடம் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தன்னிடம் கேள்வி கேட்ட மாணவனை பழிவாங்க பேராசிரியர் துடித்ததாகவும், அவரது தூண்டுதலின் பேரில், கீழவல்லம் கிராமத்தை சேர்ந்த அருள் அரசன் என்பவர், மாணவன் திலீப்குமாரை கத்தியால் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 438

    0

    0