எதிர் வீட்டுப் பெண்ணை புரட்டி எடுத்த புரோட்டா மாஸ்டர் : கம்பால் அடித்து துன்புறுத்திய ஷாக் வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2022, 3:08 pm

சாத்தான்குளம் அருகே பெண்ணை புரோட்டா மாஸ்டர் ஒருவர் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டியத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ராமசெல்வி. இவர்கள் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை மோடிநகரில் வாடகைக்கு குடியேறி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 14ம் தேதி இடைச்சிவிளை மோடிநகர் பகுதியில் கோவில் கொடை விழா நடந்துள்ளது. அந்த விழாவிற்கு வந்த வில்லுப்பாட்டுக்காரர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரது வீட்டில் தங்கியுள்ளார்கள்.
முத்துக்குமார் புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். அப்போது வில்லுப்பாட்டு குழுவினரின் ஒருவரது செல்போன் காணாமல் போய் உள்ளது.

இதுகுறித்து வில்லுப்பாட்டுக்காரர்கள் முத்துக்குமாரிடம் தெரிவித்துள்ளனர். முத்துக்குமார் எதிர்வீட்டில் உள்ள ராமலெட்சுமியிடம் நீ தான் செல்போனை எடுத்துள்ளாய் கொடுத்துவிடு என்று கூறியுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஆகியுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இதற்கிடையில் முத்துக்குமாரின் தாயார் செல்போன் வீட்டில் தான் இருந்தது என்று வில்லுப்பாட்டு குழுவினரிடம் கொடுத்து விட்டார்.

இந்த விஷயம் ராமலெட்சுமிக்கு தெரிந்துள்ளது. உடனே ராமலெட்சுமி முத்துக்குமாரிடம் சென்று போன் உங்கள் வீட்டில் தானே இருந்தது. பின்னே என்னை ஏன் தவறாக பேசினீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே ராமலெட்சுமியை முடியை பிடித்தும், கண்ணம் மற்றும் தலையில் முத்துக்குமார் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அருகில் கிடந்த கம்பாலும் அவரை தாக்கியுள்ளார்.

இதனை அப்பகுதியில் நின்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை வைத்து தட்டார்மடம் காவல்நிலையத்தில் ராமலெட்சுமி புகார் அளித்தார்.

https://vimeo.com/762181089

புகாரின் அடிப்படையில் போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!