கிராம சபை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்வி கேட்ட பொதுமக்கள் : பதில் கூற முடியாமல் பாதியில் வெளியேறிய அமைச்சர் பொன்முடி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 2:09 pm
Minister Ponmudi - Updatenews360
Quick Share

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் சரமரியாக கேள்வி கேட்ட பொதுமக்களால் பாதியில் அமைச்சர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காந்தி ஜெயந்தியை ஒட்டி இன்று விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரபாண்டி கிராமத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்து கொண்டார்.

அவருடன் ஊரக வளர்ச்சி துறை நிர்வாக துறை அமைச்சர் உள்ளிட்ட ஏராளமான அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பொதுமக்களின் குறைகளை அமைச்சர் கேட்கும் போது, முன் வரிசையில் அமர்ந்திருந்த வீரபாண்டி கிராமத்தின் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி என்பவர் தான் ஒரு அதிமுக கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளேன் அதனால் எனக்கும் இந்த ஊராட்சிக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா எனவும், என்னை ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்தில் நடைபெறும் பணிகள் குறித்து தன்னிடம் எதுவும் சொல்வதில்லை என்றும், இது குறித்து பி.டி.ஓ விடம் கூறினாலும் அதற்கு முறையான பதில் கிடைப்பதில்லை என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அவரை அமரச் சொன்ன அமைச்சர், ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் உங்கள் பிரச்சனைகளை தனியாக பேசிக் கொள்ளுங்கள் என்றும், கிராம சபையில் பொதுப் பிரச்சனைகள் குறித்து மட்டுமே பேசவேண்டும் என்றும் கூறினார்.

மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்ட போது, கழிவு நீர் கால்வாய், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சரமாரியாக அடுக்கடுக்காக முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, உங்கள் கேள்விகளுக்கு இங்கு வந்துள்ள அரசு அலுவலர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள் எனவும், தான் அடுத்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றும் கூறி அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 506

    0

    0