சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்.. தர்ம அடி கொடுத்து பிடித்த பொதுமக்கள் ..!

Author: Vignesh
9 July 2024, 7:11 pm

பழனி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர் எடுத்துச் சென்ற போது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பழனி மருத்துவமனை கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை மற்றும் சைக்கிள்கள் மருத்துவமனை வெளியே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை மர்மநபர் நோட்டமிட்டு சைக்கிளை திருடி செல்லும் பொழுது சைக்கிள் உரிமையாளர் பார்த்தவுடன் அருகிலேயே போட்டு தப்பித்துச் செல்ல முயன்றுள்ள போது அருகில் இருந்த பொதுமக்கள் திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். உடனடியாக பழனி நகர காவல் காவல்துறையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் திருடனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தில் பழனி அருகே பெரும்பாறை பகுதிக்கு சேர்ந்த முத்துராஜ் என்பதும் இவர் மீது ஏற்கனவே திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…