நடிகர் விஜய் அரசியல் கட்சி குறித்து நிருபர்கள் கேட்ட கேள்வி.. நக்கலாக பதில் சொன்ன நடிகர் வடிவேலு!!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2024, 8:07 pm
நடிகர் விஜய் அரசியல் கட்சி குறித்து நிருபர்கள் கேட்ட கேள்வி.. நக்கலாக பதில் சொன்ன நடிகர் வடிவேலு!!
பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று சரியாக சுமார் 6.30 மணி அளவில் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார்.

அதன் பின் ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் மேற்கொண்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் அவரது தாய் மறைந்து ஒரு வருடம் கடந்த நிலையில் தனது தாய்க்கு மோட்ச தீபம் ஏற்றுவதற்காக உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்ததாக தெரிவித்தார்.
வடிவேலின் வருகையை கண்டு சுற்றி இருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரைகள் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
நடிகர் விஜய் புதிய கட்சிஆரம்பித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவ்வளவுதான் என நக்கலாக பதில் தெரிவித்தார்