இளைஞர் கேட்ட கேள்வி.. பிரச்சாரத்தை நிறுத்திய சௌமியா அன்புமணி : வைரலாகும் ஷாக் VIDEO!!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2024, 7:30 pm
இளைஞர் கேட்ட கேள்வி.. பிரச்சாரத்தை நிறுத்திய சௌமியா அன்புமணி : வைரலாகும் ஷாக் VIDEO!!
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடி பிடித்து வரும் நிலையில், வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சௌமியா தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் இன்று பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்பொழுது அ.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கோபாலபுரம், மருக்காலம்பட்டி, பூத் நத்தம், மெணசி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது பெண்கள் சௌமியாவிற்கு ஆரத்தி எடுத்தும், பூ தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த சௌமியா, பெண்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்பொழுது திடீரென வந்த இளைஞர் ஒருவர் சௌமியாவிடம் பேசினார். அப்பொழுது 10.5 இட ஒதுக்கீடு கேட்டோம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போட்டோம். ஆனால் அதை மத்திய அரச, பாஜக செய்யவில்லை. ஆனால் பாஜகவோடு எதற்கு கூட்டணி சேர்ந்தீர்கள். என கேள்வி கேட்டார். அப்பொழுது சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பாமக வேட்பாளர் சௌமியா, இளைஞரை சமாதானப்படுத்த, இட ஒதுக்கீடு கொடுக்காததால் தான், நாம் அவர்களோடு சேரவில்லை என தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த இளைஞரை அழைத்து சென்றனர்.