பஸ்ஸுக்குள் பெய்த மழை… அரசுப் பேருந்தின் அவல நிலையால் பயணிகள் அவதி ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 6:50 pm

கோவையில் மோசமான நிலையில் இருக்கும் பேருந்திற்குள் மழை நீர் ஊற்றுவதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

கோவையில் நேற்று சாய்பாபா காலனி துடியலூர் கவுண்டம்பாளையம் உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக வழி தடம் எண் “4m” இந்த பேருந்து உக்கடம் பகுதியில் இருந்து துடியலூர் செல்கிறது.

மழையின் நடுவே ஓடும் இந்த பேருந்தில் மழைநீர் உள்ளே ஊற்றாக வழிந்தோடுகிறது. இதனால், பயணிகள் இருக்கையில் உட்காராத முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சவர் குளியல் போன்று நீர் ஊற்றாக வழிகிறது.

இது போன்ற பேருந்துகளை உடனடியாக அரசு செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://player.vimeo.com/video/814968882?h=9835bc77f0&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!