கோவையை சூறையாடிய மழை.. விடிய விடிய பெய்த மழையால் சூழ்ந்த வெள்ளம்.. சுரங்கப்பாதைகள் மூடல் : போக்குவரத்து பாதிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2023, 11:12 am

கோவையை சூறையாடிய மழை.. விடிய விடிய பெய்த மழையால் சூழ்ந்த வெள்ளம்.. சுரங்கப்பாதைகள் மூடல் : போக்குவரத்து பாதிப்பு!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.அதன்படி நேற்று இரவிலிருந்து அதிகாலை வரை கோவை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

குறிப்பாக மாநகர பகுதியான சிங்காநல்லூர், உக்கடம்,காந்திபுரம், பீளமேடு,உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

அதேபோல மாநகர பகுதியில் உள்ள அவிநாசி சாலை மேம்பாலம் பகுதியில் முழுமையாக மழை நீர் சூழ்ந்ததால், குளம் போல் காட்சியளிக்கிறது.இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து மழைநீர் அகற்றும் பணியினை கோவை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி