என் கைதுக்கு காரணம் உதயநிதிதான்.. எல்லாமே அவர் உத்தரவோடதான் நடக்குது : சவுக்கு சங்கர் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2024, 6:53 pm

பெண் போலீசாரைப் பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில் நீலகிரி போலீசாரும் அவர் மீது வழக்கு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஒருநாள் காவல் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தனர்.

அதன்படி சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சென்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.

இந்நிலையில், வயிற்று வலி எனக்கூறி சவுக்கு சங்கர் மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இன்று மதியம் 12.30 மணியளவில் சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சிகிச்சை முடிந்ததும் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே “என் கைதுக்கு உதயநிதிதான் காரணம், உதயநிதி உத்தரவின் பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 267

    0

    0