அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமே அவங்க போட்ட கண்டிஷன் தான் : திண்டுக்கல் சீனிவாசன் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2024, 9:00 am

அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமே அவங்க போட்ட கண்டிஷன் தான் : திண்டுக்கல் சீனிவாசன் பரபர!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தான், நாங்கள் அடுத்த பிரதமராக வருவதற்கும் பிரதமர் மோடிக்கு முழு தகுதி உண்டு என கூறினோம். அதேபோல. அடுத்த முதல்வராக வருவதற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு தகுதி உள்ளது என்றும் நாங்கள் கூறினோம்.

ஆனால் பாஜகவினர் அதனை ஏற்க மறுத்து, அடுத்த பிரதமராக வருவதற்கு நரேந்திர மோடிக்கு தகுதி உள்ளது. ஆனால், அடுத்து தமிழக முதல்வராக வருவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தான் தகுதி உள்ளது என கூறினர். பழனி முருகனுக்கு காவடி தூக்கலாம். நாங்கள் ஏன் அண்ணாமலைக்கு காவடி தூக்க வேண்டும்.? எங்கள் முன்னாடியே ‘நாளைய முதல்வர் அண்ணாமலை வாழ்க’ என்று அந்த கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள். அப்போ நாங்கள் என்ன இழிச்சவாயனுகளா என கடுமையாக விமர்சித்தார் திண்டுக்கல் சீனிவாசன்.

மேலும், இவ்வாறான முரண்பட்ட கருத்துக்களை எழுந்ததால் தான் நாங்கள் தைரியமாக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். இனி பாஜகவுடன் ஒட்டுமில்லை. உறவுமில்லை என்ற முடிவுக்கு வந்தோம் என்று அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற அதிமுக கட்சி கூட்டத்தில் பேசினார்.

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 291

    0

    0