சென்னை : புளியந்தோப்பில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை உறவினர் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர பாபு(40) . இவருக்கு திருமணம் ஆகி மெர்சி என்ற மனைவியும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர். மெர்சியின் தம்பி சீனிவாசலுவின் மகளுக்கு வருகின்ற 11-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக புளியந்தோப்பில் உள்ள ராஜேந்திர பாபு வீட்டில் நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. அப்போது மெர்சியின் அக்கா ருத்ரமாவின் மருமகன் சதீஷ் என்பவரும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது ராஜேந்திர பாபு மதுபோதையில் சதீஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
சதீஷும் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மெர்சிக்கும் சதீஷிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி ராஜேந்திர பாபு சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் ராஜேந்திர பாபுவை தள்ளி விட்டு கீழே இருந்த கல்லை எடுத்து அவர் மீது போட்டுள்ளார். மேலும் அங்கிருந்த கத்தியால் ராஜேந்திர பாபு கழுத்தில் குத்தியும் உள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ராஜேந்திரபாபுவை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சதீஷிக்கும் , ராஜேந்திர பாபுவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தெரியவந்துள்ளது. அதனைதொடர்ந்து புளியந்தோப்பு போலீசார் வியாசர்பாடியில் பதுங்கியிருந்த சதீஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னையும் அவரது மனைவியையும் சேர்த்து வைத்து பேசியதால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
This website uses cookies.