வாய்தாவுக்கு வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்.. நீதிமன்றத்தில் துடிதுடித்து இறந்த கொடூரம்.. வழக்கறிஞர்கள் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2024, 4:50 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சொத்து பிரச்சனை காரணமாக வாய்தாவிற்காக வி.அம்மாபட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர் தாஸ் (வயது 65) வந்திருந்தார்.

காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு வந்த அவர் கூட்ட நெரிசல் மற்றும் போதிய வெளிச்சம், காற்றோட்டம் இல்லாமல் அவதிப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி அளவில் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து மூச்சு விட சிரமப்பட்டார். இதனை அறிந்த வழக்கறிஞர்கள் அவரை தூக்கி கோர்ட்டின் வெளியே காற்றோட்டமான பகுதிக்கு கொண்டு வந்தனர்.

அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரின் வழக்கறிஞர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தார். வேடசந்தூர், சாலையூர் நால்ரோடு, எரியோடு ஆகிய பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் இல்லாததால் திண்டுக்கல்லில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பாகவே கோர்ட்டு வளாகத்தில் பிரான்சிஸ் சேவியர்தாஸ் துடிதுடித்து உயிரிழந்தார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

வக்கீல்கள் அனைவரும் தங்களது பணியை நிறுத்திவிட்டு கோர்ட் வளாகத்தில் குவிந்தனர். கோர்ட்டுக்கு வழக்குக்காக வந்திருந்த ஏராளமான வழக்காடிகளும் குவிந்தனர்.

இதனால் கோர்ட்டு வளாகமே மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. கோர்ட்டு வளாகத்திற்குள் போதிய மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்றும் காற்றோட்ட வசதியையும் ஏற்படுத்தி வழக்காடிகளும் வக்கீல்களும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெயர் சொல்ல விரும்பாத வக்கீல் தெரிவித்தார்.

தகவல் அளித்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கணேஷ், அங்கமுத்து, தனிப்பிரிவு போலீசார் பாலு, அந்தோணி, கோர்ட் போலீசார் உடனடியாக இறந்தவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து பதற்றத்தை தனித்தனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 316

    0

    0