வகுப்பறையில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. அலறிய மாணவர்கள் : 3 பேர் படுகாயம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2024, 2:16 pm

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பெரிய தள்ளபாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை 413 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

பதினோராம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷ், மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய மூவரும் பள்ளி துவங்கும் முன்பபே தங்களுடைய வகுப்பறைக்கு வந்து படித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியில் மேற்கூரை பூச்சி கட்டிடம் இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில் மூன்று மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்த மூன்று மாணவர்களையும் தலைமை ஆசிரியர் காளியப்பன் உடனடியாக சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சிரிச்சுக்காக அழைத்துச் சென்றனர்.

பின்னர் மூவரையும் மேல் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை காவல் துறையினர் பள்ளியின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு

இந்த கட்டிடம் 2021-22 ஆண்டில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் நிதி ஒதுக்கீட்டில் ரூ 21.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் இந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் முதல் மாணவர்கள் பயன்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று மாணவர்கள் மீது பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!