சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து.. மழைக்கு ஒதுங்கிய 50 பேர் கதி? ஊழியர் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2023, 9:20 pm

சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து.. மழைக்கு ஒதுங்கிய 50 பேர் கதி? ஊழியர் பரிதாப பலி!!

சென்னை மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்திற்கு, 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். இதுவரை, இடிபாடுகளில் சிக்கிய 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் அதி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த துயர சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்த கந்தசாமி (வயது 56) உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 13 பேர் சென்னை கிண்டி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!