விஸ்வரூபம் எடுக்கும் சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதிக்கு புதிய சிக்கல் : நாள் குறித்த நீதிமன்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2024, 2:45 pm

விஸ்வரூபம் எடுக்கும் சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதிக்கு புதிய சிக்கல் : நாள் குறித்த நீதிமன்றம்!

அமைச்சர் உதயநிதியின் சனாதன பிரச்சனை அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சால் இந்தியா முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

உதயநிதியின் கருத்தக்கு பல்வேறு தரப்பும் கண்டனங்கள் தெரிவித்தன, பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் வாதிட்ட தமிழ்நாடு அரசு “விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் இத்தகைய மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. நாடு முழுவதும் 40க்கும் அதிகமான வழக்குகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்துகளின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கவுசலேந்திர நாராயணன் என்பவர் பாட்னாவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் பிப்.13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!