உயிர் பலி வாங்கும் அபாய கடல்… நண்பர்களுடன் குளித்த இளைஞர் மாயம் : உடல் கிடைப்பதில் சிக்கல்… தேடும் போலீசார்!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2022, 8:37 pm

பழவேற்காடு கடலில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் அலையின் சீற்றம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டு மாயமான போலீசார் உடலை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையில் ரெட்டம்பேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பரத் என்கிற சின்னராசு தனது நண்பர்களுடன் கடலில் குளித்த போது அலையின் சீற்றம் காரணமாக உள்ளே இழுத்துச் செல்லப்பட்டு அவர் நீரில் மூழ்கி மாயமானார்.

அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முடியாமல் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பாலைவனம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடற்கரைப் பகுதியில் பல மணி நேரம் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.

நேற்று தடை செய்யப்பட்ட படகு சவாரி மேற்கொண்ட போது பழவேற்காடு ஏரியில் அலை சீற்றம் காரணமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் இன்று கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் அலையின் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழவேற்காடு சுற்றுலா தளத்தில் பாதுகாப்பு பணிக்கு திருப்பாலைவனம் காவல்நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாததால் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாமல் போலீசார் தொடர்ந்து சிரமம் அடைந்து வருகின்றனர். கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!