பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர் போலீசே அல்ல… மாசாணி அம்மன் கோவிலில் பரபரப்பு சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan3 September 2024, 4:59 pm
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்
நேற்று அமாவாசை என்பதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது ஆனைமலை போலீசார் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீஸ் உடை அணிந்த பெண் ஒருவர் பாதுகாப்பு பணியில் பரபரப்பாக ஈடுபட்டு இருந்தார். வழக்கமாக பணியாற்றும் போலீசாருக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனை அடுத்து ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவிலுக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பணபள்ளியை சேர்ந்த ரீத்தா என்பதும் காவல்துறையின் மீது உள்ள ஈர்ப்பினால் போலீஸ் உடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
காக்கி சட்டை கமல்ஹாசன் போல் போலீஸ் உடை அணிந்து பெண் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது ஆனைமலை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து அவரை ஆனைமலை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.