தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்காக வந்த கப்பல்.. வெளிநாட்டில் இருந்து வந்த கொடிமரங்கள்.!!
Author: Udayachandran RadhaKrishnan10 August 2024, 4:09 pm
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் உலகம்மன் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்ந்து வருகிறது.
கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி வேலைகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள கொடி மரங்களுக்கு புதிய மரங்கள் நடப்பட உள்ளது.
இந்த கொடி மரங்களை சுவாமி சன்னதி கொடிமரம் தொழிலதிபர்கள் அழகராஜா ,,அம்மன் சன்னதிக்கு வெங்கடேஷ் ராஜா ஆகியோர் சொந்த செலவில் வழங்கியுள்ளனர்.
இருவரும் அதற்கான மரங்களை தேர்வு செய்ய ஆஸ்திரேலியா அருகிலுள்ள பப்புவா நியூகினியா நாட்டிலிருந்து சுமார் 2500 மரங்களில் இருந்து நேர்த்தியான இரண்டு வேங்கை மரங்களை தேர்வு செய்து தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக கப்பலில் கொண்டு வந்தனர்.
பின்னர் அந்த மரங்கள் லாரிகள் மூலமாக தென்காசி கொண்டுவரப்பட்டு கொடி மரத்திற்கான பிரத்தியேக சைஸில் ஆலையில் அறுக்கப்பட்டு இன்று காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
சுவாமி சன்னதிக்கு 45 அடி நீள கொடி மரமும் அம்மன் சன்னதிக்கு 38 அடி நீள கொடிமரமும் கொண்டுவரப்பட்டது. இந்த கொடி மரங்கள் கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையில் தொழிலதிபர்கள் அழகர்ராஜா வெங்கடேஷ் ராஜா ஆகியோர் முன்னிலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
புதிதாகக் கொண்டுவரப்பட்ட கோவில் கொடி மரங்களை ஆலயத்திற்கு வருகை தந்த பல்வேறு பக்தர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
1
0