வீட்டுக்குள் வந்தால் போதை வாசம்… போலீசார் சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி : 15 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2022, 4:56 pm

விழுப்புரம் நகரபகுதிகளில் வீட்டில் பதுக்கி தடைசெய்யப்பட்ட பான்மசாலாவை வினியோகித்த நபரை போலீசார் கைது செய்து 5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா மற்றும் 94 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் நகர பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கடைகளுக்கு தடை செய்யப்பட்ட பான்மசாலா வினியோகிக்கப்படுவதாக டி.எஸ்.பி பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் மணி நகரை சார்ந்த ஹபிப் ரஹ்மான் என்பவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்ததில் பெங்களூருவிலிருந்து தடை செய்யப்பட்ட பான்மசாலாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து வீட்டில் 14 மூட்டைகளில் 150 கிலோ எடையில் 5 லட்சம் மதிப்பிலான பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து ஹபிப் ரஹ்மானை கைது செய்தனர். பான் மசலாவை பதுக்கிய நபரிடமிருந்து 94 ஆயிரம் ரொக்க பணத்தையும் பான்மசாலா கடத்தலில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு தடைசெய்யப்பட்ட பான்மசாலா பெங்களூரு பகுதியிலிருந்து காய்கறி வண்டிகள் வாடகை வண்டிகளில் கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர் பகுதி வழியாக கடத்தப்பட்டு வருவதால் அதனை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாகவும் பான்மசாலா கடத்திய 15 நபர்களின் வங்கி கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளதாக எஸ் பி ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 806

    0

    0