காதலி வீட்டுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… சடலமாக மீட்ட சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan5 June 2023, 12:51 pm
திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆமூர் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்த மலையாளி என்பவரது மகள் சங்கவி (வயது 20).
பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் வீட்டில் தந்தைக்கு துணையாக கோரைப்பாய் பின்னும் வேலை செய்து வந்தார். சங்கவி முசிறி அடுத்து மணல்மேடு பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு காதலியை பார்ப்பதற்காக ஆமுர் சங்கவி வீட்டின் பகுதிக்கு இரவு வந்தபோது அப்பகுதி மக்கள் திருடன் என நினைத்து அடித்துள்ளனர். இதனைக் கண்ட சங்கவி நான் அவரை காதலிக்கிறேன் என்னை பார்ப்பதற்காக தான் வந்தார் என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவனை அவனது வீட்டுக்கு அனுப்பி வைத்து சங்கவி பெற்றோர்கள், பொதுமக்களும் திட்டி உள்ளனர். காதலனுக்கும் காதலுக்கும் ஏற்பட்ட அவமானத்தால் மனம் உடைந்த சங்கவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை சங்கவி ரூமில் இருந்து வெளியே வராததால் சங்கவியின் பெற்றோர்கள் கதவை தட்டி பார்த்தபோது தூக்கில் தொங்கி நிலையில் இருந்துள்ளார்.
இதனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
சங்கவின் பெற்றோர் சங்கவிக்கு தீராத வயிற்று வலியால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.