புது மாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை… விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் தகவல்.!!

Author: kavin kumar
30 January 2022, 8:38 pm

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் புது மாப்பிள்ளையை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி சகாய மாதா தெருவை சேர்ந்தவர் பீட்டர்.இவரது மகன் கவாஸ்கர் ( 34), மீனவர்.
இவருக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. நேற்று முன்தினம் மாலையில் கவாஸ்கர் கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்த தனது நண்பர் இருதய ஜான்ஸ் ராஜா (35) என்பவருடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மது அருந்தினர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் கவாஸ்கரை நண்பர் இருதயஜான்ஸ் ராஜா கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.இருதய ஜான்ஸ் ராஜாவை பிடிக்க இன்ஸ் பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா பக்கம் உள்ள நரிக்குளம் கரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொலையாளி இருதய ஜான்ஸ் ராஜா போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருதய ஜான்ஸ் ராஜா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:- என் தந்தை பெயர் ஜேம்ஸ். எனது தாயார் இறந்த பிறகு எனது தந்தை வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு கன்னியாகுமரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.

இதனால் நான் வீட்டுக்கு செல்லாமல் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தேன். நான் மீன் பிடி தொழில் செய்து வருகிறேன். என்னுடன் கடலுக்கு மீன் பிடிக்க கன்னியாகுமரி சகாய மாதா தெருவைச் சேர்ந்த எனது நண்பர் கவாஸ்கர் என்பவரும் வருவார். அந்த நட்பு அடிப்படையில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் நாங்கள் அடிக்கடி அறை எடுத்து மது அருந்தி ஜாலியாக இருந்து வந்தோம். அப்போது என்னிடம் என் நண்பர் கவாஸ்கர் நீ பிரபல ரவுடி மகனுடன் சுற்றித்திரிவது எனக்கு பிடிக்கவில்லை என்றும் அந்த ரவுடியின் மகனுடன் சேர்ந்து பலரை நான் மிரட்டி வந்ததாகவும் கூறி என்னை கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் நீ எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை என்று கூறினேன். இதனால் எங்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவாஸ்கரின் கழுத்தில் சரமாரியாக குத்தினேன். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததைப் பார்த்து நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார். கைது செய்யப்பட்ட இருதயஜான்ஸ் ராஜாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 2898

    0

    0