மது அருந்தும் போது பிரச்சனை… கூட இருந்த கூட்டாளிகளால் பழக்கடை ஊழியர் கொலை? பொள்ளாச்சி மார்க்கெட் அருகே பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2022, 6:33 pm

பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் பழக்கடை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் வசித்து வருபவர் குப்புசாமி (வயது 40). இவர் அப்பகுதியில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகே ரத்த தலை மற்றும் உடலில் காயங்களுடன் குப்புசாமி இறந்து கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரவு நேரங்களில் குப்புசாமி நண்பர்களுடன் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில் குப்புசாமியை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…