வாடகைதாரர் மீது தீ வைக்க முயன்ற கடை உரிமையாளர் : தனக்கு தானே தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 November 2022, 7:58 pm

திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான கடையை அவர் ராஜா என்பவருக்கு உள் வாடகைக்கு விடுவதற்காக ஒரு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ரங்கராஜனின் சகோதரர்கள் அவருக்கு தெரியாமல் ராஜாவிடம் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடையை காலி செய்ய சொல்லி ரங்கராஜ் கூறிய பொழுது ராஜா முழு தொகையும்
கேட்டுள்ளார்.

ஆனால் ரங்கராஜ் ரூ.1 லட்சம் மட்டுமே தருவதாக கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரங்கராஜிற்கு கத்தி குத்து காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ரெங்கராஜ், ராஜாவை பெட்ரோல் எடுத்து ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது ராஜா தப்பிவிட்டார். இந்நிலையில் கோபமான ரங்கராஜ் தனக்கு தானே தீ குளித்தார்.

இதனால் காந்தி மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த காந்தி மார்கெட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!