பொழப்பில் மண்ணள்ளி போட்ட ரவுடிகள் : கஞ்சா வாலிபர்களால் கடையை மூடி நோட்டீஸ் ஒட்டிச் சென்ற வியாபாரி!!
Author: Udayachandran RadhaKrishnan16 March 2023, 5:54 pm
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பஜார் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சுபம் ட்ரேடர்ஸ் என்ற பெயரில் கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 11.03.23 அன்று தக்கோலம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் மற்றும் இவரது உறவினர் இருவருக்கும் அடிதடி நடந்தது.
இது சம்பந்தமாக முத்துராமலிங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் சண்டைபோட்டுக் கொண்ட இருவரும் உறவினர்கள் என்பதால் இருவரும் சமாதானமாக போய்விட்டனர்.
ஆனால் புகார் கொடுத்த ராமலிங்கத்தை சண்டை போட்ட இருவரும் நீங்கள் யார் எங்கள் மீது புகார் கொடுக்க என தினம் தோறும் கடையின் முன்பு கஞ்சா போட்டுக் கொண்டு ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்,.
இதனால் முத்துராமலிங்கம் பயந்து கடையை மூடி விட்டு ஷட்டரில் கஞ்சா போதையில் உலா வரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்படுவதாக எழுதி ஒட்டிச் சென்றுள்ளார்.
படத்தில் வரும் காட்சிகளைப் போல நாங்க அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அடிச்சுக்குவோம் புடிச்சிக்குவோம் நீ யாருடா இடையல கேக்குறது என வடிவேல் மாட்டிக் கொண்ட கதையா இருக்கு இந்த விவகாரம்.
நாளுக்கு நாள் கஞ்சா பெருக்கும் ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் இதுபோன்று வாலிபர்கள் ரகளை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.