காமராஜ் முதல்வராக இருந்த போது கட்டிய அணையின் ஷட்டர் கழன்று விழுந்ததால் பரபரப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…(வீடியோ)!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 11:19 am

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் ஒரு ஷட்டர் கழன்று விழந்ததால் கரையோர மக்கள் பாதுகாப்பக இருக்க பொதுபணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்.

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ் அவர்கள் கட்டிய அணைகளில் மிகவும் பிரபலமான அணைகளில் பரம்பிக்குளம் அணையாகும், மேற்க்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழை பெய்யும் இடம்மான சோலையார் அணை உபரிநீர் சேடல்டேம் வழியாக சென்று தூணகடவு வழியாக சென்று பரம்பிக்குளம் அணை வந்துசேருகிறது.

71 கன அடி கொண்ட பரம்பிக்குளம் அணை உபரிநீர் வெளியேற்றம் செய்யும் பொழுது கோரள சாலக்குடிநீர் சென்று கடலில் கலக்கிறது. நேற்று இரவு10 மணி அளவில் அணையில் உள்ள மூன்று ஷட்டர்களில் நடுவில் இருந்த ஒரு ஷட்டர் கழன்று விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

பொதுபணி துறை ஊழியர்கள் உயர்அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின்பேரில் பாலக்காடு ஜில்லா மாவட்ட கலெக்டர் முனராய் ஜோஷி மற்றும் தமிழக, கேரளா பொது பணித்துறை அதிகாரிகள் தற்பொழுது அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர்ரை கட்டுபடுத்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://vimeo.com/751983345

மேலும் அணையின் நீரால் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 594

    3

    1