லாரி ஓட்டுநரின் சாமர்த்தியம்.. நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய பள்ளி பேருந்து : பதை பதைக்க வைத்த சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2023, 10:51 am

சூலூர் அருகே நிலக்கரி லோடு ஏற்றி வந்த லாரி பள்ளி பேருந்து மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் லாரியை வலது புறமாக திருப்பியதால் தடுக்கப்பட்ட பெரும் விபத்து சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி பதப்பதைப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் செந்தில் முருகன், திருநெல்வேலியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு நிலக்கரி லோடு ஏற்றி வந்துள்ளார்.

கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது கிட்டம்பாளையம் நால்ரோடு அருகே லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது வாகரயாம் பாளையத்திலிருந்து கருமத்தம்பட்டி நோக்கி எதிர்ப்புறமாக வந்த தனியார் பள்ளி பேருந்தின் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் லாரியை வலது புறமாக திருப்பினார்.

வலது புறம் இருந்த பேரிகார்டரில் மோதிய லாரி, அங்கிருந்த பேருந்து நிழற்குடை மீது மோதி நின்றது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எதிர்ப்புறம் வந்த தனியார் பள்ளி பேருந்து விபத்திலிருந்து தப்பியது.

லாரி ஓட்டுனரின் சமயோசிதத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்த பகுதியில் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி இருவர் உயிரிழந்த நிலையில் சாலையின் இருபுறமும் பேரிகார்டர்கள் அமைக்கப்பட்டபோதும் இப்பகுதியில் சாலை விபத்துகள் தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • goundamani is the only actor who called rajinikanth without respect ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?