ஷூவுக்குள் ஒளிந்திருந்த பாம்பு.. கரணம் தப்பினால் மரணம் : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2023, 9:40 am

ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் சிவில் சப்ளை அலுவலகம் அருகில் தொழிலதிபர் வீட்டில் ஷூவிற்குள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.

இன்று அதிகாலை வீட்டு உரிமையாளர் வாக்கிங் செல்வதற்காக வெளியே வரும் போது சரசரவென்று வரும் சத்தத்தை உற்று கவனித்து பார்த்திருக்கிறார்.

அப்பொழுது பாம்பு ஒன்று செப்பல் ஸ்டாண்ட் அருகே சென்று பதுங்கிவிட்டது. உடனடியாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் யுவராஜ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக விரைந்து வந்து கொடிய விஷம் உடைய கண்ணாடிவிரியின் பாம்பை பத்திரமாக மீட்டுக் கொடுத்தார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வெயில் காலம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் கடந்த இரண்டு வாரங்களில் 120 பாம்புகளுக்கு மேல் யுவராஜ் அவர்கள் பல்வேறு பகுதிகளில் மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி