தந்தை உயிரிழந்த சோகத்தில் தூங்க சென்ற மகன்.. அறையை திறந்து பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2024, 6:59 pm

தந்தை உயிரிழந்த சோகத்தில் தூங்க சென்ற மகன்.. அறையை திறந்து பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் வேம்பு. இவருடைய மகன் ராம்சங்கர் (வயது 29). இவர் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
இதற்கிடையே கடந்த 3 மாதத்திற்கு முன்பு வேம்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். தந்தை இறந்ததில் இருந்து ராம்சங்கர் மனம் உடைந்து காணப்பட்டார். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு உள்ளானார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ராம்சங்கரின் தாயார் அருகில் உள்ள மகள் வீட்டுக்கு தூங்க சென்றார். ராம்சங்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து மகனை எழுப்ப அறைக்கு சென்றார். அப்போது ராம்சங்கர் மின்விசிறியில் சேலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 991

    0

    0