சொத்தை எழுதி வாங்கி பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன் : சார் ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2023, 10:58 am

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை. இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு சதீஷ், அனீஷ் என்ற இரு மகன்கள் உண்டு.

மூத்த மகன் சதீஷ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் இரண்டாவது மகன் அனீஷ்க்கு திருமணம் செய்து வைத்ததோடு தங்கள் பெயரில் இருந்த வீடு மற்றும் நிலத்தையும் அவர் பெயரில் செட்டில்மென்ட் ஆவணமாக எழுதி கொடுத்துள்ளனர்

இந்த நிலையில் கூலி வேலை பார்த்து வந்த நீலகண்ட பிள்ளை முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிய நிலையில் மனைவி தங்கமும் புற்று நோயால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்

இவர்களை மகன் அனீஷ் மற்றும் மருமகள் பிரதீபா சரிவர கவனிக்காமல் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்த அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பத்மநாபபுரம் சார் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் எங்களுக்கு சொந்தமான வீட்டையும் நிலத்தையும் மகனுக்கு செட்டில்மென்ட் ஆவணமாக எழுதி கொடுத்துள்ளோம். இப்போது எனது மகன் தனது மனைவியுடன் சேர்ந்து எங்களை அடித்து வீட்டை விட்டு வெளியேறுமாறு துன்புறுத்தி வருகிறான்.

தற்போது நாங்கள் உறவினர்கள் வீட்டில் இருப்பதாகவும் தனது மகனிடம் இருந்து பராமரிப்பு கிடைக்க பெறாத காரணித்தினாலும் புற்றுநோய் செலவினங்களுக்காகவும் எனது மகனுக்கு எழுதி கொடுத்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்யும் படி மனு கொடுத்தனர்.

இதனையடுத்து அவர்களது மகன் மற்றும் மகளிடம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்திய சார் ஆட்சியர் கௌசிக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று தங்கம் தனது வீடு மற்றும் நிலத்தை மகன் அனீஷ் பெயருக்கு எழுதி கொடுத்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உத்தரவு நகலை வழங்கியதோடு அவர்களுக்கு மகன் அனீஷ் இடையூறு ஏற்படுத்தினால் காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்தார்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 921

    0

    0