ரேஷன் அட்டையால் வந்த வினை.. தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்.!!
Author: Udayachandran RadhaKrishnan15 May 2024, 4:12 pm
ரேஷன் அட்டையால் வந்த வினை.. தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்.!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (50) – அபிராமி தம்பதியினர்.
இவர்களுக்கு தேன்மொழி மற்றும் ஆனந்தகுமார் என இரண்டு திருமணமான மகளும், மகனும் உள்ளனர்.
இதில், தேன்மொழி திருமணமாகி விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையில் உள்ள தனது கணவருடன் வசித்து வருகின்றார்.
மேலும், ஆனந்தகுமாருக்கு (27)திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், வீட்டில் தாய் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்தகுமார் தனது மனைவி பிள்ளைகளுடன் அருகில் உள்ள சித்தலிங்கமடம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு தனது தந்தை ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற ஆனந்தகுமார். ரேஷன் கார்டில் எனது பிள்ளைகள் பெயர் சேர்க்க வேண்டும் அதற்கு அப்ளிகேஷனில் கையெழுத்து போட வேண்டும் என தந்தையிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க: கிணற்றில் மலம் கலப்பு? விசாரணையில் பரபரப்பு… அடை, தேன் அடை : விழித்த விழுப்புரம்!
அதற்கு தந்தை மறத்ததால் தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆனந்தகுமார் அங்கிருந்த கத்தியை எடுத்து தனது தந்தையை சரமாரியாக வயிற்றில் குத்திவிட்டு தப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹரி கிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆனந்தகுமாரை கைது செய்து பின்னர், ஹரிகிருஷ்ணனை மீட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அவரை புதுச்சேரி அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஹரி கிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது போதையில் தனது தந்தையை மகனே கத்தியால் குத்தியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.