சொத்தை அபகரித்து தாயை நடுத்தெருவில் விட்ட மகன் : கெஞ்சிக் கேட்டும் உதறிய மகன் குறித்து கண்ணீர் புகார்!
Author: Udayachandran RadhaKrishnan5 July 2024, 2:49 pm
தாயும் தந்தையும் கடவுளுக்கு சமமாக பார்க்கின்ற இந்த காலத்தில் பெற்ற தாயிடம் இருந்த சொத்தை அபகரித்து விட்டு சொந்த மகனே தாயை நடுத்தெருவில் விட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மூதாட்டி இந்திராணி நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில் கூறியுள்ளதாவது, மூதாட்டி இந்திராணி நாகர்கோவில் நாகராஜர் கோவில் அருகே உள்ள குறுக்கு சாலையில் வசித்து வருகிறார்.
கணவன் சிதம்பரம் சில வருடங்களுக்கு முன்பு இறந்து இறந்து விட்டார். அவர் சம்பாதித்த சொத்து இந்திராணி கைவசம் இருந்தது.
அவருடைய மகன் பத்மநாபன் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். பெற்ற தாய் கைவசம் இருந்த சொத்தை அபகரித்து கைவசம் எடுத்து உள்ளார். தாய் இருக்க இடமின்றி நடு ரோட்டில் வந்துள்ளார்.
பலமுறை கேட்டும் மகன் தாயிடம் இந்த சொத்தை கொடுக்க முன்வரவில்லை அதிகாரபூர்வமாக பத்திரப்பதிவு செய்து கூட கொடுக்காமல் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக மூதாட்டி கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மூதாட்டிக்கு சாதகமான தீர்ப்பு நீதிமன்றம் கூறியபின்பும் அதிகாரிகளும் மாவட்ட காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை எனவும் தன் மகனிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தன்னை அலைக்கழிப்பதாகவும் மகன் பத்மநாபன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீர் மல்க நாகர்கோவில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார் இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அலட்சியத்தையும் ஏற்படுத்தி உள்ளது