உயிரிழந்த தாயை சக்கர நாற்காலியில் வைத்து மயானம் கொண்டு சென்ற மகன் : மனதை ரணமாக்கும் அதிர்ச்சி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2022, 9:43 pm

தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயை, சக்கர நாற்காலியில் வைத்து 4 கி. மீ தொலைவில் உள்ள மயானம் வரை கொண்டு சென்ற மகன்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் வசித்து வந்தவர் பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி. 74 வயதாகும் ராஜேஸ்வரி என்னும் மூதாட்டி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தோல் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து அவரது மகன் முருகானந்தம் பராமரிப்பில் இருந்து வந்த மூதாட்டி இன்று காலை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து தோல் நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்ய யாரும் வரமாட்டார்கள் என கருதிய மகன் தனது இல்லத்தில் இருந்து சக்கர நாற்காலியில் உயிரிழந்த தாயை அமர வைத்து செவலூர் பகுதியில் இருக்கும் மயானம் வரை 4 கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற சம்பவம் மணப்பாறை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உருக்கமான காட்சி இணையத்தில் வைரலாகி காண்போர் கண்களை கண்ணீர் குளமாக்கி வருகிறது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!