இளைஞரின் உயிரை பறித்த வேகத்தடை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து… ஷாக் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2023, 6:00 pm
இளைஞரின் உயிரை பறித்த வேகத்தடை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து… ஷாக் வீடியோ!!
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த் (26). இவர் சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 12 மணியளவில் டிப்பார்ட்மெண் ஸ்டோரை மூடிவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.
அப்போது கொடிசியா அருகே கீதாஞ்சலி பள்ளி(தனியார் பள்ளி) அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து சந்திரகாந்த் உயிரிழந்தார்.
தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பள்ளி நிர்வாகம் சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள அந்த வேகத்தடையில் வெள்ளை நிற கோடு எதுவும் இல்லாமல் இருந்த காரணத்தால் , இரவு நேரத்தில் வேகத தடை இருப்பது தெரியாமல் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவசர அவசரமாக வேகத்தடை இருப்பதற்கான வெள்ளை கோடுகளை போட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.