அதிவேகமாக வந்த கார் மோதி தீப்பற்றி எரிந்து சேதம் : நள்ளிரவில் மதுரையில் பரபரப்பு…

Author: kavin kumar
30 January 2022, 2:25 pm

மதுரை : மதுரை ரயில் நிலையம் அருகே மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்த நபர் கடை சுவர் மீது மோதியதில் தீப்பற்றி எரிந்து சேதம். காரில் பயணித்தவர்களை பொதுமக்கள் மீட்டனர்.

மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த சுகன் என்ற இளைஞர் சிம்மக்கல் சாலை வழியாக ரயில்வே நிலையம் பகுதிக்கு காரில் அதிவேகமாக சென்றபோது சேதுபதி பள்ளி சிக்னல் அருகேயுள்ள கம்பத்தில் கார் அதிவேகமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்தது. கார் பறந்து சென்று அருகில் இருந்த மொபைல் கடை ஒன்றின் மீது மோதி நின்றது. கார் முழுவதுமாக தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.கார் முழுவதுமாக தீப்பிடித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரை மதுபோதையில் ஓட்டிவந்ததால் கார்மோதி விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

  • Sivakarthikeyan New Message to fans on his birthday ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
  • Svg%3E