வீல் சேரில் வந்த முதியவர்; கண்டு கொள்ளாத ஊழியர்கள்.. – அரசு மருத்துவமனையை கவனிக்குமா அரசு?..

Author: Vignesh
20 June 2024, 11:40 am
Quick Share

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அவல நிலையால் தள்ளாடும் வயதில் சிகிச்சைக்காக வந்த முதியவரை மருத்துவ ஊழியர் கண்டு கொள்ளாததால் வீல் சேரில் வைத்து தள்ளி கொண்டு சிகிச்சை பெற்ற இளைஞர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தில் உள்ள 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். இன்று காரியாண்டி அருகே உள்ள தட்டான்குளத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்ற முதியோரை அவரது தள்ளாடும் வயதில் உள்ள மனைவியும் அவரது பேரன் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தனியார் வாகனத்தில் அழைத்து வந்தனர்.

அந்த முதியவருக்கு காலில் மிகப்பெரிய புண் ஏற்பட்டதால் நடக்க முடியாமல் மருத்துவ சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது, மருத்துவமனையில் ஓபி சீட்டு போட்டு விட்டு அங்குள்ள பெண் அதிகாரியிடம் என்னுடைய தாத்தாவுக்கு நடக்க முடியாது. உள்ளே கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியதற்கு அப்போது அங்குள்ள பெண் அதிகாரி அருகிலுள்ள வீழ்சேரை எடுத்து உள்ளே தள்ளிக் கொண்டு உங்கள் தாத்தாவை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு செல் என்று கூறியுள்ளனர்.

அந்த சிறுவனோ அந்த பெரியவரை மருத்துவமனையில் உள்ள வீல் சேரில் அமர வைத்து தள்ள முடியாமல் தட்டு தடுமாறி மருத்துவ சிகிச்சைக்காக உள்ள சென்று மருத்துவ சிகிச்சை பெற்று உள்ளார். இது போன்ற ஏழை எளிய மற்றும் தள்ளாடிய வரும் முதியோர்களை அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கூறுகின்றனர்.

Views: - 100

0

0