மாநில பாஜக தலைவர் அதிரடியாக மாற்றம்… மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு : அதிரும் அரசியல் களம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 September 2023, 2:54 pm
பாஜக தலைவர் அதிரடியாக மாற்றம்… மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு : அதிரும் அரசியல் களம்!!
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை, கடந்த சில நாட்களாகவே அதிமுகவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ஜெயலலிதா, அண்ணா பற்றி அவர் சர்ச்சையாக பேசியது அதிமுகவுக்குள் பூகம்பத்தை கிளப்பியது.
இதனால் கடுப்பான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்து வருவதாக செய்திகள் வெளியானது. இதற்காக டெல்லி சென்ற அதிமுக நிர்வாகிகளை சந்திக்க அமித்ஷா, ஜேபி நட்டா மறுத்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இதன் விளைவாக அண்மையில் புதுச்சேரியிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில்லை என அறிவித்தது. அதிமுகவுடன் கூட்டணி இல்லாவிட்டால் தென்னிந்தியாவிலேயே பாஜக என்ற ஒரு கட்சி இடம் தெரியாமல் போயிருக்கும். கர்நாடகத்தில் இருந்த பாஜக தனது ஆட்சியை தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலையால்தான் இழந்தது என்பதை பாஜக தலைவர்கள் உணர வேண்டும். அண்ணாமலையை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர் சந்திப்பில் போட்டுடைத்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதன் தற்போது மாற்றப்பட்டு அவருக்கு பதில் செல்வகணபதி எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டுள்ளார்.