கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்… கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் சடலம்.. ஷாக் சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan23 June 2023, 8:24 pm
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேடப்பாளையம் பிரிவில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது.
இந்தநிலையில் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி பார்த்த போது கை கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து கிணற்றில் இருந்து வாலிபரின் உடலை மீட்ட தீயணைப்பு மற்றும் பல்லடம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிணற்றில் மிதந்த வாலிபர் நாரணாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார்(34) என்பது தெரியவந்தது.
மேலும் சுரேஷ் குமாரின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததால் வேறு யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என பல்வேறு கோணங்களில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கை கால் கட்டப்பட்டு இறந்த நிலையில் வாலிபர் சடலமாக கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.