கோவை : அரசு பள்ளியின் கழிவறையை மாணவனை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை அருகே உள்ள பேரூர் செம்மேடு பகுதியில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கூடம் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஜெயந்தி (வயது 53) பணியாற்றி வருகிறார்.
அந்தப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவனை கடந்த 29ஆம் அந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அந்த மாணவனின் தாயார் பள்ளி ஆசிரியரிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது ஆசிரியர்கள் அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவரின் தாயார் தன் மகனை அரசு பள்ளி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்து வைத்ததாக கூறி ஆலாந்துறைகாவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன் பேரில் போலீஸ் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். இதில் பள்ளியில் மாணவரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததுடன், மாணவரின் தாயை அவமரியாதையாக பேசியதும் தெரியவந்தது .
இதைத்தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியை தங்கமாரியம்மாள்( வயது 47) ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.