நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவிகள்.. ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரவேற்பு!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2023, 2:35 pm

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவிகள்.. ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரவேற்பு!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் அரசு உதவி பெறும் மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எலிசபெத் பாத்திமா இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் நல்லாசிரியர் விருதைப் பெற்றுக் கொண்டு பள்ளி திரும்பிய எலிசபெத் பாத்திமா விற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பேருந்து நிலையம் முதல் பள்ளி வரை இருபுறமும் அணிவகுத்து நின்ற மாணவிகள் விருது பெற்ற தலைமை ஆசிரியரை திறந்த வெளி ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வந்தனர் .

ஊர்வலத்தில் பொதுமக்கள் பங்கேற்று தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.வழிநெடுகிலும் மாணவிகள் விருது ஆசிரியருக்கு பூங்கொத்து மற்றும் பரிசுகளை கொடுத்து உற்சாகப் படுத்தினர்.

தமிழக அரசின் உயரிய விருதான நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை பள்ளி மாணவிகள் ஊர்வலமாக அழைத்து வந்து உற்சாகப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இந் நிகழ்வில் பள்ளி நிர்வாக குழுவினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!