யாசகம் எடுத்து வந்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த துணை நடிகர் மரணம்.. தெருவில் இறந்து கிடந்த சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2023, 5:49 pm

கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் வறுமையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் இறந்தார்.
சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்தவர் சின்னு.

இவரது இளைய மகன் மோகன் (வயது 60) திருமணமாகதவர். திரைப்படங்களில் துணை நடிகராக அறிமுகமானார். கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப் படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார்.

மேலும் நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இறந்த மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் பிச்சை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடந்த தகவலையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் இறந்த மோகனின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த மோகனுக்கு 2 சகோதரர்கள், 5 சகோதரிகள் உள்ளனர். இறந்த மோகனுடைய உடலை இலவச ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அடுத்துள்ள மூலக்கரை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது பின்னர் அவர் உடலில் மின் தகனம் செய்யப்பட்டுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!