உச்சநீதிமன்றமே சொல்லிருச்சு.. பிரதமர் பதவிக்கு மோடி தகுதியற்றவர் : சூடான அமைச்சர் மனோ தங்கராஜ்!
மக்களை தேடி முதல் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்சியை தமிழக முதலமைச்சர் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6-வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட 591-பயனாளிகளுக்கு பணி ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தக்கலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய அவர் மாதம் தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு உரிய உரிய உத்தரவுகள் பிறப்பித்து வருவதாகவும் தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து காங்கிரேட் மற்றும் பேவர் பிளாக் சாலைகளாக மாற்றப்பட்டு வரீவதாகவும் தார் சாலைகளை ஒரு இஞ்ச் கனம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பதிலளித்தார்
கனரக வாகன விபத்தை தடுக்கும் விதத்தில் கழிந்த மாதம் கனரக வாகனங்களுக்கு 93 லட்சத்தி 50-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் திருட்டு வழக்கு உட்பட பல வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனரக வாகன விபத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஜோதிநிர்மலா அவர்களை கண்காணிப்பு அலுவலராக நியமித்துள்ளதாகவும் கூறினார்.
தேர்தல் பத்திரம் வாயிலாக திமுக தேர்தல் நிதி வாங்கியிருப்பது சின்ன தொகை. 6-ஆயிரம் கோடிக்கு மேல் ஆளுகின்ற அரசு நிதி வாங்கியிருக்கிறது.
ரிசர்வ் வங்கி தேர்தல் கமிஷன் நாட்டின் மீது அக்கரை கொண்டவர்களும் இது தவறாக போய் விடும் என்று எச்சரித்த பிறகும் அதை கண்டு கொள்ளாமல் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் எனவே தான் அரசியலமைப்பிற்கு சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த தீர்ப்புக்கு பிறகு ஒரு நிமிட நேரம் கூட மோடி அவர்கள் அந்த பதவியில் இருக்க தகுதியற்றவர் அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
This website uses cookies.