தலையில்லாமல் வால் ஆடக்கூடாது… யாரை சொல்கிறார் பாஜகவின் சசிகலா புஷ்பா?

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2023, 5:37 pm

தலையில்லாமல் வால் ஆடக்கூடாது… யாரை சொல்கிறார் பாஜகவின் சசிகலா புஷ்பா?

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பாராளுமன்றத்தில் சட்ட மசோதா இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் முதல் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் பாஜக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும், தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் தேர்தல் கூட்டணியை பொறுத்த வரை எங்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என்ன சொல்கிறாரோ அதுதான் எங்களின் முடிவு என்றார்.

தலைவர் சொல்லாமல் நாங்கள் எதையும் சொல்ல மாட்டோம். தலை ஆடாமல் வால் ஆடக்கூடாது. அதிமுகவினரின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது என்றும் கூறினார். அதிமுக பாஜக இடையே கூட்டணி முறிந்து விட்டதாக ஜெயக்குமார் கூறிய நிலையில் நிர்வாகிகள் பலரும் கருத்து கூறினர். கூட்டணியும் இல்லை ஒரு புண்ணாக்கும் இல்லை அதிமுக எம்எல்ஏ பேசியது வைரலானது.

அதிமுகவின் ஐடி விங் நிர்வாகிகள் பலரும் பாஜக கூட்டணிக்கு எதிராகவும் அண்ணாமலைக்கு எதிராகவும் கருத்து கூறினர். “நன்றி மீண்டும் வராதீங்க” என்று ஹேஸ்டேக் பதிவிட்டும் பாஜகவிற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர். இந்த நிலையில் எங்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் என்று கூறி கூட்டணி முறிவு பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அண்ணாமலை.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!